×

மோர்க்களி

தேவையானவை

இட்லி அரிசி – 200 கிராம்,
புளித்த தயிர் – 100 மில்லி,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
மோர் மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைச் சேர்க்கவும். கடுகு கொஞ்சம் வெடித்ததும் உளுந்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரிசி மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கரைத்து நன்கு கிளறி இறக்கவும். ஒரு பெரிய பிளேட்டில் இதனைப் போட்டு ஆறியவுடன் சாப்பிடலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

The post மோர்க்களி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...